கத்தோலிக்க- கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு கத்தோலிக்க- கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு 

கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சபைகளோடு வாழ்வின் உரையாடலுக்கு அழைப்பு

மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்தோர், தங்களின் தினசரி வாழ்விலும், கிறிஸ்துவின் பெயரால் துன்புறுவதிலும், ஏற்கனவே கிறிஸ்தவ ஒன்றிப்பு அனுபவத்தைப் பெற்றுள்ளனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

திருமுழுக்கு, மேய்ப்புப்பணி, அந்தந்த இடங்களின் பரிமாணம் ஆகிய மூன்றும், கிறிஸ்தவ சபைகளின் முழு ஒன்றிப்பை நோக்கிய பாதைக்கு முக்கியமானவைகளாகத் தெரிகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க மற்றும், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழுவினரிடம் இவ்வியாழனன்று கூறியுள்ளார்.

கத்தோலிக்க மற்றும், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழுவின் பிரதிநிதிகளை, ஜூன் 23,  இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்களுக்கு தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் இப்பிரதிநிதிகளைச் சந்திப்பது குறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த திருத்தந்தை, இப்பிரதிநிதிகள் அருளடையாளங்கள் என்ற முக்கியமான தலைப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது, கடவுளின் உதவியோடு, கிறிஸ்தவ சபைகள், முழு ஒன்றிப்பை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு புதியதொரு முயற்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.  

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு, திருமுழுக்கு அடிப்படையானது, கிறிஸ்தவ ஒன்றிப்பு எப்போதும் மேய்ப்புப்பணி பண்பைக் கொண்டது, கிறிஸ்தவ ஒன்றிப்பு, ஏற்கனவே அந்தந்த இடங்களில் நிலவுகிறது என, அருளடையாளங்கள் என்ற தலைப்பு, மூன்று முக்கிய கூறுகள் குறித்த தூண்டுதலைத் தனக்குத் தந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கத்தோலிக்க- கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு
கத்தோலிக்க- கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு

திருமுழுக்கில் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பின் அடித்தளத்தைக் காண்கிறோம்  என்றும், அருளடையாளங்கள் நம் மேய்ப்புப்பணி ஒன்றிப்பை ஆழப்படுத்த ஊக்கப்படுத்துகின்றன என்றும், முழு ஒன்றிப்பு இன்றியே, சில மேய்ப்புப்பணி உடன்பாடுகள், சில கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சபைகளோடு இடம்பெற்றுள்ளன என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.   

மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்தோர், தங்களின் தினசரி வாழ்விலும், கிறிஸ்துவின் பெயரால் துன்புறுவதிலும், ஏற்கனவே கிறிஸ்தவ ஒன்றிப்பு அனுபவத்தைப் பெற்றுள்ளனர் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இக்குழுவின் அடுத்த கலந்துரையாடல், திருஅவையின் போதனை மற்றும், வாழ்வில் கன்னி மரியா என்ற தலைப்பில் இடம்பெறுவது பற்றிக் குறிப்பிட்டு, உங்களின் பணிகளை ஏற்கனவே இறையன்னையின் பரிந்துரையிடம் ஒப்படைத்துள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2022, 15:23