புதிய கழகங்களுக்கு திருப்பீடத்தின் அனுமதி அவசியம்
மேரி தெரேசா: வத்திக்கான்
பின்னாளில் துறவற நிறுவனங்களாக மாறும் என்ற எதிர்பார்ப்பில், நம்பிக்கையாளரின் புதிய பொதுவான கழகங்களை உருவாக்குவதற்குமுன்னர், மறைமாவட்ட ஆயர்கள், திருப்பீடத்திடமிருந்து எழுத்து வழியாக அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஆணை கூறுகிறது.
ஜூன் 15 இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆணைப் பத்திரத்தில், மறைமாவட்டத்தின் உரிமையோடு, பின்னாளில் அர்ப்பணிக்கப்பட்ட துறவு சபை அல்லது, திருத்தூது வாழ்வு கழகத்தை உருவாக்கும் எண்ணத்தில் மறைமாவட்ட ஆயர்கள், நம்பிக்கையாளரின் புதிய பொதுவான கழகங்களை உருவாக்குவதற்குமுன்னர், துறவியர் பேராயத்திடமிருந்து எழுத்து வழியாக அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 7ம் தேதி திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான திருஅவை அதிகாரிகளால் உருவாக்கப்படும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கலின் கழகங்கள், பொதுவான கழகங்கள் என அழைக்கப்படுகின்றன என்று திருஅவை சட்டம் கூறுகிறது..
2020ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவை சட்டம் எண் 579ல் கொண்டுவந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக இப்புதிய விதிமுறை உள்ளது என்றும், ஆயர் ஒருவர், தன் மறைமாவட்டத்தில் புதிய துறவு ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்குமுன்னர் திருப்பீடத்திடம் முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்