தேடுதல்

ஐரோப்பிய காரித்தாஸ் ஐரோப்பிய காரித்தாஸ்  

செயல்களில் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் இருங்கள் : திருத்தந்தை

"சந்திப்பு மற்றும் தொண்டு கலாச்சாரத்தின் பாதையில் நடக்கவும், நமக்கு நெருக்கமானவர்களுடன் வேலை செய்யவும், உலகளாவிய நட்புடன் செயல்படவும் நாம் தயாராக இருக்க வேண்டும்”: திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காரித்தாஸ் பணி என்பது,  நிகழ்காலத்தில் தொடரும், மற்றும் எதிர்காலத்தின் நம்பிக்கை கதவுகளைத் திறக்கும் ஒரு பணியாகும் என்றும், இது, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் முகத்தில் துன்புறுவோரைக் கண்டு, அவர்களுக்கு நட்பு, உதவி, ஆறுதல் ஆகியவற்றை வழங்குவதற்கு வழிவகுக்கிறது என்றும் காரித்தாஸ் அமைப்பு ஒன்றிடம் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஸ்பெயினில் காரித்தாஸ் அமைப்பு தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டை கொண்டாடும் நிலையில், ஸ்பெயின் காரித்தாஸ் தலைவர் Manuel Bretón Romero அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனுக்கு நன்றி கூறவும், தூய ஆவியானவரின் வழிகாட்டுதலில் புதிய திட்டங்களுக்கான பாதைகளை அறிந்துகொள்ளவும் அழைப்புவிடுத்துள்ளார்.

காரித்தாஸின் பயணம் என்பது, விளிம்பு நிலையினரோடு பயணம், இரக்கத்தின் பயணம்,  புதுப்பித்தலின் பயணம்  என அவ்வமைப்பிற்கே உரிய மூன்று முக்கிய பயணங்கள் பற்றி அக்கடிதத்தில் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகளும் புறந்தள்ளப்பட்டோரும் நம் கதவைத் தட்டும் வரை நாம் காத்திருக்க கூடாது, மாறாக, நாமே அவர்களைச் சந்திக்கச் செல்ல வேண்டும் என்றும், அவர்களின் நன்மையையும் முழு வளர்ச்சியையும் தேட வேண்டும் என்றும், அவர்களின் மனிதமாண்பு மற்றும் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்" என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2022, 14:45