நோத்ரு-தாம் அன்னை மரியா பேராலயத்தில் மாலை வழிபாடு

கியூபெக் நகரின் Notre-Dame பேராலயம், முதலில் ஒரு சிற்றாலயமாக எழுப்பப்பட்டது. பின்னர் இது 1647ஆம் ஆண்டில் பேராலயமாக உயர்த்தப்பட்டு, அமைதியின் நமதன்னை என்ற பெயர் சூட்டப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூலை 28, இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, அப்பேராயர் இல்லத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள நோத்ரு-தாம் அன்னை மரியா பேராலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்பேராலயத்தில் கனடா நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், மற்றும் மேய்ப்புப்பணியாளர்களோடு மாலை திருப்புகழ்மாலை திருவழிபாட்டை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருவழிபாட்டில் திருத்தந்தை மறையுரை ஒன்றும் ஆற்றினார்.  

நோத்ரு-தாம் அன்னை மரியா பேராலயம்

கியூபெக் அன்னை மரியா பேராலயத்தில் மாலை திருப்புகழ்மாலை
கியூபெக் அன்னை மரியா பேராலயத்தில் மாலை திருப்புகழ்மாலை

கியூபெக் நகரின் Notre-Dame நமதன்னை பேராலயம், முதலில் 1633ஆம் ஆண்டில் Notre Dame de la Recouvrance என்ற பகுதியில் ஒரு சிற்றாலயமாக எழுப்பப்பட்டது. பின்னர் இது 1647ஆம் ஆண்டில் பேராலயமாக கட்டப்பட்டு, அமைதியின் நமதன்னை என்ற பெயர் சூட்டப்பட்டது. இது, அந்நகரில் கல்லால் கட்டப்பட்ட முதல் ஆலயமும், 1664ஆம் ஆண்டில், மெக்சிகோவிற்கு வடக்கே அமைக்கப்பட்ட முதல் பங்கு ஆலயமுமாகும். இது 1759ஆம் ஆண்டில் கியூபெக் நகர் ஆக்ரமிக்கப்பட்டருந்தபோது தீக்கிரையானது. 1743ஆம் ஆண்டில் மீண்டும் இது கட்டப்பட்டது. 1922ஆம் ஆண்டில் கனடாவின் Ku Klux கலகக் கும்பல் உருவாக்கிய பிரச்சனையில் இது மீண்டும் தீக்கிரையானது. அதன்பின்னர்  Maxime Roisin , Raoul Chenevert ஆகிய இரு கட்டடக் கலைஞர்களும் இவ்வாலயத்தைச் சீரமைத்தனர். 2014ஆம் ஆண்டில் இப்பேராலயம் தன் 350ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தது.1674ஆம் ஆண்டில் புனித François de Laval அவர்கள் கியூபெக் நகரின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டதையடுத்து, இவ்வாலயம், பேராலயமாக மாறியது. அதற்கு 200 ஆண்டுகள் சென்று திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அதனை பசிலிக்காவாக உயர்த்தினார். இப்பசிலிக்காவில் புனித François de Laval அவர்களின் கல்லறை,  இன்னும் கனடாவின் புனிதர்கள் மற்றும், அருளாளர்களின் திருப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி புனிதக் கதவு திறக்கப்பட்டது. இத்தேசிய பேராலயத்தை, யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சொத்துக்களில் ஒன்றாக குறித்துள்ளது. கனடாவின் Québec நகரின் புனித அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்புகழ் மாலை திருவழிபாடே, இவ்வியாழன் தின கடைசி பயணத் திட்டமாகும். இயேசு, நம் வாழ்வின் தோல்விகளிலிருந்து நம்பிக்கை மற்றும் குணப்படுத்தல் நோக்கி நடத்திச் செல்கிறார். கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு, நம் தோல்விகளை பின்னுக்குத்தள்ளி, முன்னோக்கிச் செல்வதற்கு இயேசு நம்மோடு நடந்து வருகிறார். இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார். எனவே கடவுளில் நம்பிக்கை வைத்து நம் வாழ்வை முன்னோக்கி நடத்துவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2022, 15:00