உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்பால்  உருகும் பனிப்பாறைகள் உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்பால் உருகும் பனிப்பாறைகள்  

மக்கள், இயற்கை மதிக்கப்படுவதற்கு புதிய வழிகளைத் தேடுங்கள்

வட இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையின் Marmoladaவில் ஏற்பட்ட பனிச்சரிவால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், 19 பேர் காணாமல்போயுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மக்களும், இயற்கையும் மதிக்கப்படுவதற்கு புதிய வழிகளைத் தேடுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 4, இத்திங்களன்று இத்தாலியில் நடைபெற்ற இயற்கைப் பேரிடரையொட்டி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார்.

வட இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையின் Marmoladaவில் ஏற்பட்ட பனிச்சரிவால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், ஒன்பது பேர் காயமுற்றுள்ளனர். மேலும், காணாமல்போயுள்ள 19 பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர் என செய்திகள் கூறுகின்றன.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக நாம் அனைவரும் இறைவனை மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலநிலை மாற்றத்தால் நாம் எதிர்கொள்ளும் பெருந்துயர்கள், மக்களும், இயற்கையும் மதிக்கப்படுவதற்கு புதிய வழிகளை உடனடியாகத் தேடுமாறு வலியுறுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இம்மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வால்டர் மிலான் என்பவர் கூறுகையில், அண்மை நாள்களில் பனிமலை உச்சியில், பத்து டிகிரி செல்சியுஸ் வெப்பம் இருக்கின்றது, இது வழக்கத்திற்கு மாறானது என்று கூறியுள்ளார். உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்பால், அண்மை ஆண்டுகளாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்றும் செய்திகள் கூறுகின்றன. 

2வது டுவிட்டர்

மேலும், ஜூலை 4, இத்திங்களன்று இறைவேண்டல் (#Prayer) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், “மனிதரின் உயிர் வாழ்க்கைக்கு மூச்சு அவசியம், அவர்கள் ஆற்றுகின்ற காரியங்கள் தற்பொழுது நடைபெறுபவை, ஆனால், செபிக்கின்றவர்கள், கடவுளின் கண்களில் தாங்கள் விலைமதிப்பற்றவர்கள் என்பதை அறிந்திருக்கின்றனர்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2022, 15:01