உலகப் பெரிய, மற்றும் பூர்வீக மதங்களின்  நிறைவு நாள் கருத்தரங்கில்  திருத்தந்தை உலகப் பெரிய, மற்றும் பூர்வீக மதங்களின் நிறைவு நாள் கருத்தரங்கில் திருத்தந்தை  

உலக பெரிய, மற்றும் பாரம்பரிய மதங்களின் கருத்தரங்கில் திருத்தந்தை

பொருளாதார வளர்ச்சிக்கும் ஆன்மிக மற்றும் ஒழுக்கரீதி வளர்ச்சிக்கும் இடையேயான சரிசம நிலையையும் உறுதி செய்யவேண்டும். கஜகஸ்தான் அரசுத்தலைவர் Kassym-Jomart Tokayev

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புதன் பிற்பகல் உள்ளூர் நேரம் 3 மணிக்கு கஜகஸ்தானில் ஒரு முக்கிய நிகழ்வு இடம்பெற்றது. அதாவது, உலகப் பெரிய, மற்றும் பூர்வீக மதங்களின் கருத்தரங்கின் நிறைவு நாள் மற்றும், அதன் இறுதி பரிந்துரை அறிக்கை வெளியிடும் நாள்.  இக்கருத்தரங்கில் முதலில் திருத்தந்தை தன் உரையை வழங்கினார்.

திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து, கஜகஸ்தான் அரசுத்தலைவர் Kassym-Jomart Tokayev அவர்கள், அக்கருத்தரங்கை நிறைவுச் செய்யும் தன் இறுதி உரையை வழங்கினார்.உலக அளவில் கலாச்சாரங்களிடையே கலந்துரையாடல், நம்பிக்கை போன்றவற்றை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும், மதங்களிடையேயும் மக்களிடையேயும் அமைதியையும், ஒத்துழைப்பையும் ஊக்கப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் அரசுத்தலைவர்.

 உலகில் இடம்பெறும் அதிகாரத்திற்கான அரசியல், மற்றும் பகைமை பேச்சுக்களைக் களைந்து, நீண்ட கால நிலையான தன்மைக்கு  உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சிக்கும் ஆன்மிக மற்றும் ஒழுக்கரீதி வளர்ச்சிக்கும் இடையேயான சரிசம நிலையையும் உறுதி செய்யவேண்டும் என்பது அவரின் வேண்டுகோளாக இருந்தது. இதில் மதத்தலைவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என மேலும் எடுத்துரைத்துத் தன் உரையை நிறைவுச்செய்தார் அரசுத்தலைவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2022, 15:05