பொருட்காட்சி மைதானத்தில் திருப்பலிக்காக கூடியிருந்த மக்கள் பொருட்காட்சி மைதானத்தில் திருப்பலிக்காக கூடியிருந்த மக்கள் 

பொருட்காட்சி மைதானத்தில் திருத்தந்தையின் திருப்பலி

போர் நிறைந்த இவ்வுலகிற்கு அமைதி மட்டுமே நல்ல பதில், அதற்கான சிறந்த வழி உரையாடல். போருக்குச் செலவிடுவதை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குச் செலவிடும் உலகமாக மாற அனைவரும் தொடர்ந்து செபிக்க வேண்டும் . திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 3.30 மணிக்கு நூர்-சுல்தான் பொருட்காட்சி மைதானத்தில் திருப்பலி நிறைவேற்ற திருப்பீடத்தூதரகத்திலிருந்துப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அந்த மைதானத்தை 15 நிமிடத்தில் வந்தடைந்து, திறந்தகாரில் அந்த மைதானத்தில் விசுவாசிகளிடையே ஒரு வலம் வந்தார். பின்னர் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் 4.00 மணிக்குத் திருப்பலியைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலியில் கத்தோலிக்கர் மட்டுமல்லாது, பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இத்திருப்பலியில் கஜகஸ்தானின் Astana பெருமறைமாவட்டப் பேராயர் Tomash Bernard Peta திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து ஒரு சிறு உரையை ஆற்றினார். திருத்தந்தையும் திருப்பலியின் இறுதியில் தன் நன்றியையும், அமைதிக்கான அழைப்பையும் விடுத்தார்.

இத்திருப்பலி நல்ல முறையில் நடந்தேற உதவிய அனைவருக்கும் நன்றி கூறிய திருத்தந்தை, Oziornoje வில் உள்ள அமைதியின் அரசி தேசிய திருத்தலத்தோடு ஆன்மீக ரீதியாக இப்பெருவிழாவன்று தான் இணைவதாகவும், போர் நிறைந்த இவ்வுலகிற்கு அமைதி மட்டுமே நல்ல பதில், அதற்கான சிறந்த வழி உரையாடல் எனவும் எடுத்துரைத்து போருக்குச் செலவிடுவதை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குச் செலவிடும் உலகமாக மாற அனைவரும் தொடர்ந்து செபிக்கக் கேட்டுக்கொண்டார்.   ஆயர் Tomash வழங்கிய கஜகஸ்தான் மக்களின் நன்றி, மனித குல அமைதி என்று பொறிக்கப்பட்ட சிலுவையைக் குறித்துத் தன் நன்றியையும் தெரிவித்தார்.

உள்ளூர் நேரம் 6.45 மணிக்கு நூர்-சுல்தான் பொருட்காட்சி மைதானத்திலிருந்து திருப்பீடத்தூதரகம் சென்றதுடன் திருத்தந்தையின், புதன் தின நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2022, 15:23