கஜகஸ்தான்  திருப்பயணம் முடித்து உரோம் திரும்பும் திருத்தந்தை கஜகஸ்தான் திருப்பயணம் முடித்து உரோம் திரும்பும் திருத்தந்தை 

கஜகஸ்தானிலிருந்து விடைபெற்றார் திருத்தந்தை

வத்திக்கான் நாட்டு தலைவர் என்ற வகையில் இராணுவ மரியாதை வழங்கப்பட்டு, அங்கு குழுமியிருந்த அதிகாரிகளிடம் விடைபெற்று உரோம் நோக்கி தன் பயணத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்த இரு நாள் கருத்தரங்கு நிறைவு நிகழ்ச்சியில், அங்கு வந்திருந்த மதத்தலைவர்களை வாழ்த்தி, உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு அங்கிருந்து காரில் நூர்-சுல்தான் விமான நிலையம் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். சுதந்தர மாளிகைக்கும் விமான நிலையத்திற்கும் இடையேயுள்ள 17.7 கிலோமீட்டர்  தூரத்தை 30 நிமிடத்தில் கடந்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, கஜகஸ்தான் அரசுத்தலைவர் விமான நிலையத்தில் சந்தித்து பிரியாவிடை வழங்கினார். வத்திக்கான் நாட்டுத் தலைவர் என்ற வகையில் இராணுவ மரியாதை வழங்கப்பட்டு, அங்குக் குழுமியிருந்த அதிகாரிகளிடம் விடைபெற்று உரோம் நோக்கித் தன் பயணத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விமானத்திலேயே இரவு உணவருந்தி, தான் கடந்துவந்த கஜகஸ்தான் அசர்பைஜான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா-மோந்தேநேக்ரோ, போஸ்னியா ஹெர்செகோவின், குரவேசியா ஆகிய நாடுகளுக்கு வாழ்த்துத் தந்திச் செய்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் அவரின் 38வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணம் நிறைவுக்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2022, 15:16