உலக பெரிய, மற்றும் பாரம்பரிய மதங்களின் இறுதி நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் உலக பெரிய, மற்றும் பாரம்பரிய மதங்களின் இறுதி நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ்  

உலக பெரிய, மற்றும் பாரம்பரிய மதங்களின் இறுதி நாள் அறிக்கை

பரிந்துரைகள், உறுதிமொழிகள், அர்ப்பணங்கள், விண்ணப்பங்கள் என 35 பிரிவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, அமைதிக்கும் ஒத்துழைப்புக்கும் மதங்களின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலக பெரிய, மற்றும் பாரம்பரிய மதங்களின் இந்த இறுதி நிகழ்வில் வெளியிடப்பட்ட அறிக்கைக் குறித்து சிறிது நோக்குவோம்.

பரிந்துரைகள், உறுதிமொழிகள், அர்ப்பணங்கள், விண்ணப்பங்கள் என 35 பிரிவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, அமைதிக்கும் ஒத்துழைப்புக்கும் மதங்களின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதாக உள்ளது. மதங்களிடையே, கலாச்சாரங்களிடையே, நாகரீகங்களிடையே அமைதியையும் கலந்துரையாடலையும் ஊக்குவிக்க உழைத்தல், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண ஒன்றிணைந்து உழைத்தல், தீவிரவாதங்களுக்கும் போர்களுக்கும் எவ்விதத்திலும் மதங்கள் காரணமல்ல என்பதை உறுதிச்செய்தல், பன்முகத்தன்மையை மதிக்க உதவுதல், கலந்துரையாடலை ஊக்குவிக்கும் அனைத்து அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து உழைத்தல், மதங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளை அனைத்து அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துறைகளில் இடம்பெறும் முன்னேற்றத்தை வரவேற்றல், குடும்பங்களை பலப்படுத்தல் போன்ற கருத்துக்களை குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கை, தன் இறுதி வரிகளில் கஜகஸ்தான் அரசிற்கு தன் நன்றியையும் வெளியிட்டு நிறைவுறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2022, 15:12