செபத்தை  வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தை வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இரஷ்யா- உக்ரைன் உரையாடலை வலியுறுத்தி உண்ணா நோன்பு

2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் உக்ரைனில் இயங்கி வரும் திருத்தந்தை 23 ஆம் யோவான் பவுல் அமைப்பு 500 தன்னார்வலர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையின் எல்லா செயல்பாடுகளும் பிறந்தது செபத்தினாலே என்றும், நன்றிசெபத்தின் வழியாக அவை அனைத்தும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் செபத்தின் வலிமையை எடுத்துரைத்து குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 15 இச்சனிக்கிழமை செபத்தின் வலிமை பற்றிய திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்திக்கு ஆதரவாக, இரஷ்யா உக்ரைன் இடையிலான உரையாடலை வலியுறுத்தி  ஒரு நாள் செபம், தியானம் மற்றும் உண்ணா நோன்பினை திருத்தந்தை 23 ஆம் யோவான் அமைப்பினர் மேற்கொள்கின்றனர்.

செபம், தியானம், உண்ணாநோன்பு போன்ற அமைதி முயற்சிகளின் வழியாக சமய நம்பிக்கை, ஆன்மீக வளர்ச்சி, ஒன்றிணைவதன் முக்கியத்துவம் போன்றவற்றை வலியுறுத்த முடியும் எனவும், தற்போது நடைபெற்று வரும் போர், மற்றும் மோதல்களினால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றிலிருந்து மீண்டு வர அமைதியான உரையாடல் அவசியம் என்றும் அவ்வமைப்பினர் கருதுகின்றனர்.

பணக்காரார்கள், ஆற்றல்மிக்கவர்கள் என யாருக்கும் போரை வழி நடத்த உரிமை இல்லை என்றும், போரை வழி நடத்துபவர்கள் அது ஏற்படுத்தும் விளைவுகள் ஆபத்துக்கள் மற்றும் துன்பங்களின் ஆழம் பற்றி உணராதவர்கள் என்றும் Don Benzi இயக்கத்தின் Giovanni Paolo Ramonda தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் அமைதிக்கான நாட்களான அக்டோபர் 21 மற்றும் 23  ஆகியவற்றின் முன் தயாரிப்பாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது எனவும், வன்முறையற்ற செயலின் முதல் கருவியான உண்ணா நோன்பின் வழியாக  ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மை விளைவிக்கும் உரையாடல்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் திருத்தந்தை 23 ஆம் யோவான் அமைப்பினர் வலியுறுத்துகின்றனர். 

2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் உக்ரைனில் இயங்கி வரும் திருத்தந்தை 23 ஆம் யோவான் பவுல் அமைப்பு இதுவரை 500 தன்னார்வலர்களைக் கொண்டு ஏறக்குறைய 1000 உக்ரைன் மக்கள் இத்தாலிக்கு குடிபெயர உதவியும், மனிதாபிமான அடிப்படை பொருள் உதவிகளைச் செய்தும் பணியாற்றி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2022, 14:11