congo ஆயர்களுடன் திருத்தந்தை  (கோப்புப்படம்)   congo ஆயர்களுடன் திருத்தந்தை (கோப்புப்படம்)  

CONGO -வில் அமைதிக்கு விண்ணப்பிக்கும் திருத்தந்தை

சுகாதார மையத்தில் மருத்துவராகப் பணியாற்றிய கத்தோலிக்க அருள்சகோதரி Marie-Sylvie Kavuke Vakatsuraki உட்பட பொது மக்கள் 7 பேர் ADF, ISCAP என்னும் அமைப்பினர் நடத்திய வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

CONGO வின் MABOJA கிராமத்தில் வன்முறைத் தாக்குதல்களால் கத்தோலிக்க அருள் சகோதரி உட்பட பொது மக்கள் 7 பேரின் உயிரிழப்பிற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஏற்றுக் கொள்ள முடியாத இவ்வன்முறைக்கு தன்னுடைய உறுதியான வருத்தத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  அக்டோபர் 26 இப்புதன் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு பொது மறைக்கல்வி உரை வழங்கிய திருத்தந்தை, CONGO வில் நடைபெற்ற வன்முறைக்கு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

CONGO வின் வடக்கு கீவ் மாநில, MABOJA கிராமத்தில் Butembo-Beni மறைமாவட்டத்தாரால் இயங்கி வரும் சுகாதார மையத்தில் மருத்துவராகப் பணியாற்றிய கத்தோலிக்க அருள்சகோதரி Marie-Sylvie Kavuke Vakatsuraki உட்பட பொது மக்கள் 7 பேர் ADF, ISCAP என்னும் அமைப்பினர் நடத்திய வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்துள்ள நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாத இத்தாக்குதல்களுக்கு தனது உறுதியான வருத்தத்தையும், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், அனைவருக்காக செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அக்டோபர் 20 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற இவ்வன்முறைத் தாக்குதல்களினால் பலருடைய வீடுகள் சேதமடைந்தும் தீயில் கருகியும் காட்சியளிக்கின்ற நிலையில் நீண்டகால வன்முறையால் சோர்ந்துபோயிருக்கும் அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக  ஜெபிக்ககவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2022, 13:18