தாய்லாந்து சிறார் பராமரிப்பு மையம் தாய்லாந்து சிறார் பராமரிப்பு மையம்  

சிறார் பராமரிப்பு மையத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்

தாய்லாந்து Nong Bua Lamphu சிறார் பராமரிப்பு மையத்தில் கொலைசெய்யப்பட்ட 37 பேரில் 23 பேர் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்.

தாய்லாந் நாட்டில் சிறார் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற கொடூரமான தாக்குதலுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மீக ரீதியான தன்னுடைய உடனிருப்பையும் தெரிவித்து இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

அக்டோபர் 6 வியாழன் அன்று வடகிழக்கு தாய்லாந்தில்  Nong Bua Lamphu என்னும் இடத்தில் சிறார் பராமரிப்பு மையம் ஒன்றில் தனிநபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியால் 37 பேரை தாக்கி கொலைசெய்துள்ளார்  எனவும் அதில் ஏறக்குறைய 23 பேர் 2 வயதிற்குட்பட்ட  குழந்தைகள் எனவும் அறிப்படுகின்றது.

படுகாயம் அடைந்தவர்கள் உள்ளுர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில், இந்நிகழ்விற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் திருத்தந்தையின் பெயரால் இரங்கல் தந்தி ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பியுள்ளார்

காயமடைந்தவர்கள விரைவில் நல்ல உடல் நலம் பெறவும் இறந்த சிறார்களின் குடும்பத்திற்கு இறைவன் ஆசீர்வழங்கவும், அனைவரும் உடன்பிறந்த உணர்வில் அமைதியோடும்  மகிழ்வோடும் வாழவும், அன்னை மரியாளின் துணையை வேண்டி திருத்தந்தை தொடர்ந்து செபிப்பதாகவும் அத்தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2022, 14:10