திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

பிறரன்புப் பணிகளுக்கான ஆற்றலை இயேசுவிடமிருந்து பெறுங்கள்.

இயேசுவை செபத்தில் சந்தித்து எதிர்கொள்ளும்போது அவர் நம் இதயங்களை அன்பாலும் அமைதியாலும் நிரப்புகின்றார். – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிறரன்புப் பணிகள் செய்வதற்கான ஆற்றலைப்பெற  செபத்திலும், இயேசுவைப் பற்றிய அமைதியான சிந்தனையிலும் செலவிடுங்கள் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, பிறரன்புப் பணிகள் செய்வதற்கான ஆற்றலை நாம் எங்கிருந்துப் பெறலாம் என்ற கேள்வியுடன் ஆரம்பித்த டுவிட்டர் பதிவிற்கு,  இயேசுவிடமிருந்து  ஆற்றலைப் பெறுங்கள் என்பதைப் பதிலாகப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை.

பிறரன்புப் பணிகளைத் தாராளாமாகச் செய்வதற்கான ஆற்றலை செபத்திலும் இயேசு பற்றிய அமைதியான சிந்தனையிலும், பெறலாம் எனவும், இயேசுவோடு நாம் கொள்ளும் இச்சந்திப்பில் அவர் நம் இதயங்களை அன்பாலும் அமைதியாலும் நிரப்புவதால் அதனைப் பிறரன்புப் பணிகளுக்கு நம்மால் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2022, 12:22