கைகளை ஒன்றிணைத்து, இதயங்களை இறைவனை நோக்கி திறப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
நாம் அனைவரும் நம் கைகளை ஒன்றிணைத்து நம் இதயங்களை இறைவனை நோக்கி திறக்கும்போது, அனைத்துப் புனிதர்களுடன் இணைந்து நாம் இறைவேண்டல் செய்கின்றோம் என தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் கைகள் ஒன்றிணைக்கப்பட்டு நம் இதயங்கள் திறக்கப்படும்போது, நமக்குப் பெயர் தெரிந்த புனிதர்கள், மற்றும் நம்மால் அறியப்படாமலேயே இருக்கும் புனிதர்கள் என, நமக்கு முன்னே இறைவனை நோக்கிச் சென்றுள்ள அந்த மூத்த சகோதரர் சகோதரிகளின் தோழமையில் நாம் இணைந்து செபிக்கின்றோம் என்கிறது நவம்பர் 22, இச்செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி.
மேலும் இதே நாளில், வத்திக்கானுக்கான லித்துவேனிய நாட்டின் புதிய தூதுவர் Sigita Maslauskaitė-Mažylienė அவர்கள், தன் பதவிக்குரிய அரசு நியமனச் சான்றிதழை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்து, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்