எல்லா நிலைகளிலும் நம்மோடு இறைவன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நம் வாழ்வின் ஒவ்வொரு நாள் சாதாரண நிகழ்வுகளிலும் இறைவன் மறைந்திருந்து செயலாற்றுகிறார் என்ற கருத்தை மையமாக வைத்து, நவம்பர் 29, செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘நம் வாழ்வின் மிகச் சாதாரணச் சூழல்களில் இறைவன் மறைந்திருந்துச் செயலாற்றுகிறார். அசாதரண நிகழ்வுகளில் அல்ல, மாறாக, நம் தினசரி வாழ்வு நிகழ்வுகளில், நம் தினசரி பணிகளில், நம் சந்திப்புகளில், தேவையிலிருப்போரில் இறைவன் வாழ்கிறார், அதுமட்டுமல்ல, நமக்கு அழைப்புவிடுத்து நம் நடவடிக்கைகளைத் தூண்டுகிறார்’, என்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.
இயேசுவின் பிறப்பைக் கொண்டாட நம்மைத் தயாரிக்கும் திருவருகைக்காலத்தில் இருக்கும் நாம், நம்முடன் என்றுமிருக்கும் இறைவனை உணர்ந்து அவர் தூண்டுதலினால், நம்மைச் சுற்றியிருப்போருக்கு உதவ வேண்டும் என திருத்தந்தையின் இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தி நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறது.
ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் திருத்தந்தை வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகளின் எண்ணிக்கை 4373ஆக உள்ள வேளையில், அவைகளைத் தொடர்வோரின் எண்ணிக்கை 53 இலட்சமாக உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்