திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்: தலைமைப்பணியில் முக்கிய நிகழ்வுகள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது ஏழு ஆண்டுகள், பத்து மாதங்கள் மற்றும், ஒன்பது நாள்கள் தலைமைப்பணியில், கடவுள் நம் வாழ்வின் மையத்தில் இருக்கவேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருந்தவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது ஏழு ஆண்டுகள், பத்து மாதங்கள் மற்றும், ஒன்பது நாள்கள் தலைமைப்பணியில், கடவுள் நம் வாழ்வின் மையத்தில் இருக்கவேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருந்தவர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.  

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியிலிருந்து 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை கத்தோலிக்கத் திருஅவையில் தலைமைப்பணியை ஆற்றிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அவர் 2013ஆம் ஆண்டில் தனது தலைமைப்பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தபோது உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.  

ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் தலைமைப்பணியில் 24 வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை இவர் மேற்கொண்டுள்ளார், மூன்று உலக இளையோர் நாள் நிகழ்வுகளிலும், குடும்பங்களின் உலக நிகழ்வு ஒன்றிலும் இத்திருத்தந்தை பங்குபெற்றுள்ளார்.

மூன்று திருமடல்களை Deus caritas est (Latin for "God is Love"), Spe Salvi ("Saved by Hope"), and Caritas in veritate ("Love in Truth") எழுதியுள்ளார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

இரண்டு சாதாரண உலக ஆயர்கள் மாமன்றங்கள், மற்றும், 2 சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றங்களை இவர் நடத்தியுள்ளார். 84 பேரை கர்தினால்களாக அறிவித்துள்ளார். 45 பேரை புனிதர்களாகவும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் உட்பட 855 பேரை அருளாளர்களாகவும் இவர் அறிவித்துள்ளார்.  

உலகில் கடவுள் மீதுள்ள நம்பிக்கை ஏறத்தாழ மடியும்நிலையில் உள்ளது என்றகூறி, மக்களின் வாழ்வில் கடவுள் மையத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக அதிகம் முயற்சித்தார் இவர்.

இத்திருத்தந்தை, தன் தலைமைப்பணிக் காலத்தில், திருஅவையில் சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடு பிரச்சனை, Vatileak பிரச்சனை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2022, 15:49