சாந்தா மார்த்தா இல்லத்தின் சிறார் மருந்தகத்தால் பராமரிக்கப்படும் சிறார் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிறார் மருந்தகத்தால் பராமரிக்கப்படும் சிறார்  

உக்ரைனில் துன்புறும் சிறாருக்காக திருத்தந்தை செபம்

அமைதி மற்றும், பாதுகாப்பில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட இயலாமல் இருக்கின்ற உக்ரைனின் பல சிறாரை நினைத்துப் பார்ப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிறார் மருந்தகத்தால் பராமரிக்கப்படும் சிறார் மற்றும், அவர்களை வழிநடத்துவோரை, டிசம்பர் 18, இஞ்ஞாயிறு காலையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனில் துன்புறும் சிறாரை நினைத்து அவர்களுக்காக இறைவனை மன்றாடுமாறு கேட்டுக்கொண்டார்.

வருகிற ஞாயிறன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கவுள்ளோம், இவ்வேளையில், அமைதி மற்றும், பாதுகாப்பில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட இயலாமல் இருக்கின்ற உக்ரைனின் பல சிறாரை நினைத்துப் பார்ப்போம் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

தெற்கு Caucasusவில் நெருக்கடி

மேலும், தெற்கு Caucasusவில், மனிதாபிமான நெருக்கடிகளால் துயருறும் மக்கள் மீதுள்ள தன் அக்கறையையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் இவ்வாறு கூறியத் திருத்தந்தை, பிரச்சனைக்கு அமைதியான தீர்வுகாணப்பட மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

Nagorno-Karabakh விலிருந்து Armeniaவை இணைக்கும் மலைப்பாதையை அஜெர்பைஜான் இம்மாதம் 12ம் தேதியிலிருந்து மூடியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழ்கின்ற முப்பதாயிரம் சிறார் உட்பட ஏறத்தாழ 1,20,000 அர்மீனியர்கள் உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகளின்றித் துன்புறுகின்றனர்.

இன்னும், பெரு நாட்டில் அதிகரித்துவரும் பிரச்சனைகளுக்கு உரையாடல் வழியாகத் தீர்வுகண்டு, அமைதியை நிலவச்செய்யுமாறு அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2022, 15:15