திருத்தந்தை: தென் சூடானின் அமைதிக்காக இறைவேண்டல்

2023ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தென் சூடானில் அமைதிக்காக, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

தென் சூடானின் Upper Nile மாநிலத்தில் அதிகரித்துவரும் ஆயுதம் ஏந்திய தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவரும்வேளை, அந்நாட்டில் அமைதி நிலவச் செபிப்போம் என்று, டிசம்பர் 11, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய தென் சூடானில் வருகிற ஆண்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்குத் தயாரித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் அண்மை நாள்களில் தொடங்கியுள்ள வன்முறைத் தாக்குதல்கள் மிகுந்த கவலையைத் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

தென் சூடானில் ஆயுத மோதல்கள் முடிவுறவும், குடிமக்கள் எப்போதும் மதிக்கப்படவும் உதவும்வண்ணம், அந்நாட்டில் அமைதி மற்றும், தேசிய ஒப்புரவு இடம்பெற ஆண்டவரிடம் வேண்டுவோம் என்று திருத்தந்தை திருப்பயணிகளிடம் கூறியுள்ளார்.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தென் சூடானில் அமைதிக்காக, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறை, புலம்பெயர்வு

தென் சூடானின் Upper Nile மாநிலத்தில் அண்மை நாள்களில் தொடங்கியுள்ள வன்முறையால் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். அந்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறையால் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன என்று ஐ.நா.வின் UNHCR புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2022, 12:35