திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்காக செபியுங்கள்:திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா: வத்திக்கான்
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், அவர் மிகத்தெளிவாகவும், விழிப்புடனும் இருக்கிறார், கடந்த இரவில் அவரால் தூங்க முடிந்தது என்று, திருப்பீடச் செய்தி தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் டிசம்பர் 29 இவ்வியாழன் பிற்பகலில் கூறினார்.
உடல்நலம் அதிகம் குன்றியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகத் தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்குமுன்பு, திருஅவையின் தலைமைப்பணியை ஆற்றிய 95 வயது நிரம்பிய இத்திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யுமாறு டிசம்பர் 28, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின்னும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது தலைமைப்பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அதற்குப்பின்னர், வத்திக்கானிலுள்ள Mater Ecclesiae ஆழ்நிலை துறவு இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.
மூப்பு காரணமாக இந்நாள்களில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று புரூனி அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காக, உலகின் கிறிஸ்தவர்களும் மற்றவரும் விடாது செபித்து வருகின்றனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்