கிறிஸ்மஸ் குடில் தயாரிப்பு குறித்த டுவிட்டர் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
குழந்தை இயேசுவுக்காக குடில்களைத் தயாரிக்கும்போது, நம் ஆண்டவர் யார் என்பதை மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 13, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.
இன்னும் 12 நாள்களில் கிறிஸ்மஸ் பெருவிழா சிறப்பிக்கப்படும்வேளை, அதற்காக நடைபெறும் தயாரிப்புக்களை மையப்படுத்தி இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஆண்டவர், தம்மையே தாழ்த்திய கடவுள், அவர், இரக்கமும் அன்பும் மிக்கவர், நம் சுதந்திரம் மற்றும் தெரிவுகளை மதிப்பவராய் நம் வாழ்வில் அவர் எப்போதும் தலையிடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
@Pontifex என்ற முகவரியில் வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தை 5 கோடியே 30 இலட்சம் பேர் பின்பற்றுகின்றனர். 2012ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இம்முகவரியில் தன் முதல் செய்தியைப் பதிவுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்