திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்பது அழகான செபம் - திருத்தந்தை

ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்றுக் கூக்குரலிட்டத் திருத்தூதர் பேதுரு போல நாமும் கடவுளைத் தயங்காது அழைக்க வேண்டும். - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

சந்தேகம், பயம் போன்ற உணர்வுகள் நம்மைத் தாக்கும் போது, ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்றுக் கூறுவது அழகான செபம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 03, செவ்வாய்க்கிழமையன்று மத்தேயு நற்செய்தி 14ஆம் அதிகாரம் 30வது திருச்சொற்றொடர்களை மையப்படுத்தி, திருத்தூதர் பேதுருவைப் போலக் கடவுளை நோக்கி நாமும் கூக்குரலிட வேண்டும் என்று தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை

சந்தேகம், பயம் போன்ற ஆழமான உணர்வுகளால் நாம் மூழ்குவது போலத் தோன்றும் பொழுது, ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்றுக் கூக்குரலிட்டத் திருத்தூதர் பேதுருவைப் போல நாமும் கடவுளைத் தயங்காது அழைக்க வேண்டும் எனவும், அக்குரலுக்கு செவிசாய்த்துக் கடவுளும் தனதுக் கரங்களை நமக்கு நீட்டுவார் எனவும் இத்தகைய செபம் மிகவும் அழகானது எனவும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2023, 13:12