திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

வறுமைக்கான காரணங்களை எதிர்த்துப் போராடுவோம்!

பெரும்பாலான தனது உரைகளில் சமத்துவம், புலம்பெயர்ந்தோர், தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் அடிக்கடி பேசி வருகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சமூக நீதி என்பது வறுமைக்கான காரணங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்று தான் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 20, இத்திங்களன்று, தனது டுவிட்டர் பக்க குறுந்செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூக நீதி என்பது, சமத்துவமின்மை மற்றும் உழைப்பு, நிலம் மற்றும் உறைவிடம் இல்லாமை; சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளை மறுப்பவர்களுக்கு எதிராக; மற்றும் பிறரின் மனித மாண்பை பறிக்கும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான தனது உரைகளில் சமத்துவம், புலம்பெயர்ந்தோர், தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் அடிக்கடி பேசி வருகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 12, ஞாயிறன்று, தான் வழங்கிய மூவேளை செப உரையின்போது கூட நிக்கராகுவா நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களின் இதயங்களும் உண்மை, சுதந்திரம் மற்றும் உரையாடலை உள்ளடக்கிய அமைதி மற்றும் நேர்மைக்கான வழிகளைத் தேடவேண்டும் என அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் அழைப்பு விடுத்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2023, 14:32