தூய பேதுரு பெருங்கோவில் தூய பேதுரு பெருங்கோவில்   (AFP or licensors)

திருப்பீடம் சார்ந்த பொருட்கள் உலகளாவிய இலக்கைக் கொண்டுள்ளன

வத்திக்கான் நிறுவனங்கள் அனைத்தும் திருப்பீடத்தின் பொருளாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2022 டிசம்பர் 06, வெள்ளியன்று வெளியிட்ட Motu Proprio அறிக்கையில் அறிவித்துள்ளார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் பெறப்பட்ட சொத்துக்களின் பொதுவுடைமை திருஅவைத் தன்மையை தெளிவுபடுத்துகின்றது என்றும், திருப்பீடம் சார்ந்த பொருட்கள் உலகளாவிய இலக்கைக் கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 23 வியாழனன்று வெளியிடப்பட்ட "பூர்வீக உரிமை" என்ற புதிய திருத்தூது மடலில் திருஅவையின் பணி, திருத்தந்தையின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், பொருட்களின் பொதுஇயல்பு, பொதுநலன் ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் அசையா மற்றும் அசையும் பொருட்களுக்கு ஓர் "உலகளாவிய இலக்கு" உள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அத்தகைய பொருட்களை வாங்கியவர்கள், அவற்றிற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள், அப்பொருட்களுக்குப் பாதுகாவலர்களே அன்றி உரிமையாளர்கள் அல்ல என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரிலும் அவர் அதிகாரத்தின் கீழும் அந்நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் செயல்படுகிறார்கள் என்றும், தொடர்ந்து எப்போதும் அப்படியே செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் பெறப்பட்ட பொருட்களின் பொதுத் தன்மையையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

வத்திக்கான் புனித தூய பேதுரு பெருங்கோவில்
வத்திக்கான் புனித தூய பேதுரு பெருங்கோவில்

திருஅவையின் பணி

"உண்மையான மற்றும் விவேகமான நிர்வாகம், பொருத்தமான கட்டுப்பாடுகளின் ஆதரவு, போன்றவைகள் திருத்தூதுப்பணி, வரலாற்றில் செயல்படுவதை உறுதிசெய்யும் கருவிகளாகும் என்றும், திருஅவையின் நோக்கம், நேரம், இடம்,  மற்றும் அதன் பணியை நிறைவேற்றுவதற்கு தேவையான சுதந்திரத்துடன் நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றும், அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் அதிகாரத்தின் கீழ் செயல்படுபவர்கள் 

"திருஅவையின் நிறுவனங்கள், ஒரு தனியார் உரிமையாளரைப் போல தங்களுக்காக அல்ல, மாறாக, திருத்தந்தையின் பெயரிலும் அதிகாரத்திலும், தங்கள் நிறுவனத்தின் நோக்கங்களுக்காக, பொதுவில் உள்ளவற்றைப் பெறுவதற்காக அவற்றைப் பயன்படுத்துகின்றன என்றும், பொது நலனுக்காகவும் உலகளாவிய திருஅவையின் சேவைக்காகவும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பொருட்களின் பொது இயல்பு

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பத்திரங்கள் உட்பட அனைத்து பொருட்களும், திருஅவையுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் திருஅவையின் பொதுப்பொருட்களாகும் என்றும், எந்த நிறுவனமும் திருப்பீடத்தின் பொருட்களுக்கு தனிப்பட்ட உரிமையைக் கோர முடியாது  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொது நலனை நாடுதல்

இந்த கொள்கைகள் திருப்பீடத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், பொது நலன் மற்றும் திருஅவையின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதில் உள்ள பொறுப்பைப் பின்தொடர்வதற்கு அனைவரையும் நினைவுபடுத்துகிறது என்றும், அது பொது நலனுக்காக உலகளாவிய திருஅவைக்கு சொந்தமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வத்திக்கான் நிறுவனங்கள் அனைத்தும் திருப்பீடத்தின் பொருளாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2022 டிசம்பர் 06, வெள்ளியன்று வெளியிட்ட Motu Proprio அறிக்கையில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2023, 13:39