திருத்தந்தை பிரான்சிஸ் –தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு 2020
பல வாரங்களாக மாலை இருளேத் தொடர்கிறது
அடர்ந்த இருள் நம் வளாகங்கள், தெருக்கள், நகர்களின் மீது வாசமிட்டுள்ளது.
நாம், உள்ளம் உடைந்தவர்களாக, திசைதெரியாதவர்களாக,
ஒரே படகில் பயணிப்பதை உணர்ந்தோம்
ஆனால் அதே நேரத்தில் நாம் முக்கியமானவர்கள், மற்றவர்களுக்கு தேவையானவர்கள்.
செபம் மற்றும் ஆரவாரமற்றப் பணிகள் :
இவையே நமது வெற்றிக்கான ஆயுதங்கள்.
இந்நாட்களில், பல இறப்பு செய்திகளை நாம் கேட்கிறோம்:
யாருமின்றி தனியாக இறந்து போகும் ஆண்களும் பெண்களும்,
அன்புக்குரியவர்களுக்கு இறுதி பிரியாவிடை கொடுக்க முடியாமல் போகின்றனர்.
அவர்களை நினைத்து அவர்களுக்காக செபிப்போம்.
அனைவருக்குமான ஒரு தீர்வைத் தேடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்:
அனைவருக்கும் தடுப்பூசிகள் வேண்டும்.
அனைவருக்கும் முதலாக,
மிகவும் பாதிக்கப்படக்கூடிய, மற்றும் தேவையிலிருப்போருக்கு கிடைக்கவேண்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்