'கிழக்கிலிருந்து வரும் மின்னல்’ - நூல் 'கிழக்கிலிருந்து வரும் மின்னல்’ - நூல்  

'கிழக்கிலிருந்து வரும் மின்னல்' – திருத்தந்தையின் முன்னுரை

துன்பங்களிலும், இருளிலும் இறைவன் மின்னலைப் போல் வருகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனிதகுலத்தின் இருண்ட இரவுகளுக்காகத் தந்தை கடவுளால் அனுப்பப்பட்ட ஒளி இயேசு. என்றும், இருளில் நடந்து கொண்டிருக்கும் நம்மை எழுந்து நடக்க வைக்க விரும்பிய விடியல் இயேசு என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கதைகள், நிகழ்வுகள் மற்றும் பிரதிபலிப்புகளின் வழியாகத் கிழக்கு தலத்திருஅவைகளுக்குக் குரல் கொடுக்க எண்ணி கர்தினால் Lazzaro You Heungsik அவர்களின் ‘கிழக்கிலிருந்து வரும் மின்னல்’ என்ற புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிழக்கிலிருந்து வரும் ஒளி நம் அனைவருக்கும் தேவை என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர் சிமியோனைப் போல, மிகுந்த துன்பங்களை அனுபவித்தாலும், உற்சாகத்துடன் இயேசுவை இருகரம் நீட்டி வரவேற்ற சகோதர சகோதரிகளின் துணிச்சலான சாட்சியை நாம் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நற்செய்தியின் மகிழ்ச்சிக்காக. நாம் நம்மை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கிழக்கு நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டு, புத்துயிர் பெறக்கூடிய ஆன்மிக மற்றும் திருஅவை வாழ்க்கையின் பள்ளியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்றும், இயேசு நம் வாழ்க்கையை ஒளிரச் செய்ய விரும்புகிறார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் நாளின் போது முதன் முதலாக கர்தினால் Lazzaro You Heungsik வை தான் சந்தித்து மகிழ்ந்ததாகவும், அப்போது நற்செய்தியின் மகிழ்ச்சி, நமக்கு ஆறுதல் அளித்து நம்மை உயர்த்தும் அதே வேளையில், மனித சக்தி மற்றும் பிரிவின் தர்க்கம், உலகக் கணக்கீடுகள், ஒடுக்குமுறையின் ஆயுதங்கள், ஆகியவற்றைத் தொடர்ந்து சீர்குலைக்கும் ஒரு இறைவாக்குரைத்தலின் தெளிவின்மையும் நம்மை நெருக்கடிக்குள்ளாக்குகிறது என்பது பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அம்முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளமையான மற்றும் ஆர்வமுள்ள  தலத்திருஅவை, நம்பிக்கை மற்றும் இரக்கத்தின் கருவியாக மாறி, காயமடைந்தவர்களைக் கவனித்துக்கொள்கிறது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் ஒளியில் தன்னைத் தானே மீண்டும் உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒரு அருள்பணியாளரின் உருவப்படம், சினோடல் மற்றும் பணித்தளங்களில் உள்ள மக்களுக்கு அடுத்தும் அவர்களுடனும் தன்னை மறுபரிசீலனை செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2023, 13:55