ஒப்புரவு அருளடையாளம் வழங்கப்படும் இடம் ஒப்புரவு அருளடையாளம் வழங்கப்படும் இடம்  

மகிழ்வின் அருளடையாளம் ஒப்புரவு – திருத்தந்தை

பயம் மற்றும் தீர்ப்பிடுதலுக்கான அருளடையாளமன்று, மாறாக அழகான மகிழ்ச்சியின் அருளடையாளம் ஒப்புரவு – திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒப்புரவு அருளடையாளத்தில் கடவுளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும், இதனால் ஒப்புரவு மகிழ்ச்சியின் அருளடையாளமாக மாறும் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹேஸ்டாக் 24 மணி நேரமும் இறைவனுடன் (#24hourswiththeLord) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தில்  நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் கடவுளுக்கு முதலிடம் கொடுக்கும் போது அது மகிழ்ச்சியின் அருளடையாளமாக மாறுகின்றது என்றும், கடவுள் முதன்மைப் படுத்தப்படும்போது பயம் மற்றும் தீர்ப்பிடுதலுக்கான அருளடையாளமாக அன்று மாறாக அழகான மகிழ்ச்சியின் அருளடையாளமாக ஒப்புரவு மாறுகின்றது என்றும் அக்குறுஞ்செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் மார்ச் 17 வெள்ளிக்கிழமை உரோம் Trionfale இல் உள்ள  Santa Maria delle Grazie ஆலயத்தில் நடைபெறும் 24 மணி நேர ஆராதனையை  தலைமையேற்று நடத்த உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாராதனையானது உரோம் உள்ளூர் நேரம் மாலை  4.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2023, 13:00