சுவாச நோய்த்தொற்றால் திருத்தந்தை மருத்துவமனையில் அனுமதி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மார்ச் 29, இப்புதன் மாலை, முன்பு திட்டமிடப்பட்ட சில பரிசோதனைகளுக்காகவும், சுவாச தொற்றை போக்கும் சிகிச்சைக்காகவும் உரோமையுள்ள Gemelli மருத்துவமனைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் சில நாள்கள் தங்கி சிகிச்சைப் பெறுவார் என்றும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் திருப்பீடச் செய்தி தொடர்பகத்தின் இயக்குனர் Matteo Bruni.
அண்மைய நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் சுவாச பிரச்சனைகளால் அவதியுறுவதாகக் கூறிவந்த வேளை, புதன்கிழமை காலை வழக்கம்போல் திருப்பயணிகளுக்குப் புதன் மறைக்கல்வி உரை வழங்கிய பிறகு பிற்பகலில் மருத்துவப் பரிசோதனைக்காக Gemelli மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனை முடிவுகள் திருந்தந்தை அவர்களுக்கு சுவாச நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்கின்றன என்றும், அதற்குச் சில நாள்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை அவருக்குத் தேவைப்படும் என்றும், ஆனால் திருத்தந்தைக்கு கோவிட் 19 நோய்த்தொற்று இல்லை என்றும் அவ்வறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது மருத்துவப் பரிசோதனையின்போது, தங்களின் நெருக்கத்தையும் செபங்களையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்