பெண் திருப்பயணிகளோடு உரையாடும் திருத்தந்தை பெண் திருப்பயணிகளோடு உரையாடும் திருத்தந்தை   (ANSA)

பெண்கள் தினம் பெண்களுக்கு மட்டுமே கிடைத்த சிறப்பு : திருத்தந்தை

போரால் மிகவும் துயருறும் உக்ரேனிய மக்கள் எப்போதும் நம் இதயங்களிலும் செபத்திலும் இருக்கட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 8, அனைத்துலகப் பெண்கள் நாளான இன்று, தான் அனைத்துப் பெண்களையும் நன்றியுடன் நினைவு கூர்வதாக்த் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 8, இப்புதனன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு அங்குக் கூடியிருந்த திருப்பயணிகளிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள் ஆக்கப்பூர்வமான பார்வையுடனும், கனிவான இதயத்துடனும் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் திறனின் வழியாகவும், மனித மாண்பு நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்குத் தான் அவர்களுக்கு நன்றிகூர்வதாகவும் கூறினார்.

இது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த சிறப்பு என்றும், இவ்வளாகத்திலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஒரு சிறப்பு ஆசீர்வாதத்தை தான் வழங்குவதாகவும்,  மேலும் பெண்களுக்குப் கைதட்டல்களை கொடுப்போம், ஏனென்றால் அவர்கள் அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் என்றும் பெருமைப்படக் கூறினார் திருத்தந்தை.  

இந்தத் தவக்காலத்தில், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் இன்னும் துணிவுடன் நடந்து, அவருடைய பணிவையும், தெய்வீக விருப்பத்திற்கு நமது நம்பிக்கையும் பின்பற்ற முற்படுங்கள் என்றும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மேலும், அன்பான சகோதரர் சகோதரிகளே, தயவுகூர்ந்து போரில் இறந்த உக்ரேனிய மக்களின் வலியை நாம் மறந்துவிடக் கூடாது என்றும், மிகவும் துயருறும் அம்மக்கள் எப்போதும் நம் இதயங்களிலும் செபத்திலும் இருக்கட்டும்  என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2023, 12:46