பூனா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் John Rodrigues
மெரினா ராஜ் – வத்திக்கான்
தென்னிந்தியாவில் உள்ள பூனா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மும்பையின் துணைஆயர் John Rodrigues, அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 25, சனிக்கிழமையன்று, பூனா மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் Thomas Dabre அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அதன் புதிய ஆயராக, John Rodrigues அவர்களை அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்த ஆயர் John Rodrigues அவர்கள், இந்தியாவின் மும்பை மறைமாவட்ட அருள்பணியாளராக 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் திருப்பொழிவு செய்யப்பட்டு, 2013 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மும்பை மறைமாவட்ட துணைஆயராக நியமிக்கப்பட்டார்.
1886ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் புதிய மறைமாவட்டமாக உருவான பூனா, 19191 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பகுதியாக பூனா, சத்தாரா,சோலாபூர், சங்கிலி, கோலக்பூர், இரத்னபுரி, மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்