ஹங்கேரி நாட்டிற்கான தூதர் Eduard Habsburg. ஹங்கேரி நாட்டிற்கான தூதர் Eduard Habsburg. 

ஹங்கேரி மக்களின் நம்பிக்கையைத் தூண்டும் திருத்தந்தையின் வருகை

கிறிஸ்தவம் நிறைந்த நாடான ஹங்கேரி நாட்டின் பாடல், அரசியலமைப்பு என அனைத்தும் கடவுள் நம்பிக்கை சார்ந்ததாக, கிறிஸ்தவ அடையாளம் மிகவும் புலப்படுவதாக உள்ளது என்று தெரிவித்த Habsburg.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்பமுடியாத அளவிற்கு மகிழ்வுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் ஹங்கேரி மக்கள் திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும், திருந்தந்தை இம்முறை ஹங்கேரி மக்களைச் சந்திப்பது மூன்றாவது முறை என்றும் தெரிவித்தார் ஹங்கேரி நாட்டிற்கான தூதர் Eduard Habsburg.

ஏப்ரல் 28 ,வெள்ளிக்கிழமை முதல் 30 ஞாயிற்றுக்கிழமை வரை ஹங்கேரி நாட்டிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவரின் வருகை குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார் ஹங்கேரி நாட்டுத் தூதர் Eduard Habsburg.

2019, மற்றும் 2021 ஆண்டுகளில் ஹங்கேரி நாட்டிடு மக்களை ஏற்கனவே இருமுறை சந்தித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாவது முறையாக வருகை தர இருக்கின்ற நிலையில் அதற்கான தயாரிப்புக் கூட்டங்களும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளும் மிகத்தீவிரமாக நடைபெற்று வருவதாக எடுத்துரைத்தார் Habsburg.

Eduard Habsburg.
Eduard Habsburg.

போரினால் வாடும் உக்ரைன் நாட்டின் அண்டை நாடான ஹங்கேரி ஏராளமான புலம்பெயர்ந்தோர்க்கு உதவி வருகின்றது என்று கூறிய Habsburg 50 விழுக்காடு கிறிஸ்தவர்களைக் கொண்ட ஹங்கேரி நாட்டிற்கான பாடல் 'இறைவன் ஹங்கேரியைக் காப்பாராக!' என்று தொடங்குவதிலிருந்து நாட்டின் இறைநம்பிக்கை வெளிப்படுகின்றது என்றும் கூறினார்.

ஹங்கேரி மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த உதவும் மூன்றாவது நேரம் இது என்று கூறிய Habsburg , 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மழை காற்று எனச் சுற்றுச்சூழல் சாதகமாக இல்லாத நேரத்திலும் அதனைப் பொருட்படுத்தாமல் ஹங்கேரிப் பகுதிகளைப் பார்வையிட்ட திருத்தந்தையின் செயல்களையும் நினைவுகூர்ந்தார்.

1956 ஆம் ஆண்டு, ஹங்கேரியிலிருந்து இடம்மாறி Buenos Aires இருக்கும் Mary Ward monastery சபை அருள்சகோதரிகளிடமிருந்து நாட்டைப் பற்றி, திருத்தந்தை Buenos Aires இல் இருந்தபோது தெரிந்து கொண்டார் என்றும், 'ஹங்கேரி மக்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் தைரியமானவர்கள் என்று திருத்தந்தை கூறியதையும் எடுத்துரைத்தார் Habsburg.

கிறிஸ்தவம் நிறைந்த நாடான ஹங்கேரி நாட்டின் பாடல், அரசியலமைப்பு என அனைத்தும் கடவுள் நம்பிக்கை சார்ந்ததாக, கிறிஸ்தவ அடையாளம் மிகவும் புலப்படுவதாக உள்ளது என்று தெரிவித்த Habsburg, சமூகத்தின் நலனுக்காகத் தலத்திருஅவைகள் மற்றும் சமூகங்கள் அரசுடன் இணைந்து செயல்படுகின்றன என்றும் கூறினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2023, 13:27