திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

இயேசுவின் காயங்களில் நமது காயங்களை வைப்போம் : திருத்தந்தை

சிலுவையில் தொங்கும் இயேசு, அவரது நம்பிக்கையை நம்மீது மீண்டும் உருவாக்க நம்மையை நாம் அனுமதிப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

புனித வாரத்தில் இருக்கும் இந்தப் புனித நாட்களில் சிலுவையில் அறையப்பட்ட நமதாண்டவரின் அருகில் வருவோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஏப்ரல் 5, இப்புதனன்று, வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை நாமே நேர்மையாகப் பார்ப்பதற்கு, மிதமிஞ்சியவற்றை நீக்கிவிட்டு, நம்மையே வெறுமையாக்கிய நிலையில், சிலுவையில் அறையப்பட்டுள் ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக நம்மை நிறுத்துவோம் என்றும் கூறினார். 

மேலும், நமக்காக கொடிய வேதனைகளை அனுபவித்த அவருடைய காயங்களில் நமது காயங்களை வைப்போம் என்றும், நம்மீது அவரது நம்பிக்கையை மீண்டும் உருவாக்க நம்மை அனுமதிப்போம் என்றும் விண்ணப்பித்துள்ளார். 

ஏப்ரல் 3, இத்திங்களன்று, வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்திகளில் கூட,  இயேசுவைப் போல சிலுவை என்னும் இடுக்கமான வழியை தேர்ந்துகொள்வோர் யாரும் அவநம்பிக்கையுடன் இருக்க முடியாது என்றும், வேதனை மற்றும் கைவிடப்பட்ட நிலையிலும் நாம் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத நிலைக்குக் கடவுள் உயர்ந்தார் என்றும் கூறியுள்ளது இங்கே நினைவு கூரத்தக்கது. 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2023, 13:35