திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

துன்புறும் உக்ரைன் மக்களுக்காகச் செபிப்போம் : திருத்தந்தை

மறைசாட்சியர் உடன்பிறந்த உறவுநிலை கொண்ட உலகை உருவாக்குவதில் மக்களிடையே அமைதியின் விதைகளாக விளங்கட்டும் :திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன்னல்கள் சூழ்ந்துள்ள காலங்களிலும் கூட நற்செய்திக்குச் சான்று பகிர்வதில் நாம் சோர்வடையாமல் இணைந்து இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 19, இப்புதனன்று, வெளியிட்டுள்ள முதல் குறுஞ்செய்தியில் இவ்வாறு அறிவுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையாட்சி முழுமையாக வெளிப்படும் வரை நாம் காத்திருக்கும் வேளை, மறைசாட்சியர் உடன்பிறந்த உறவுநிலை கொண்ட உலகை உருவாக்குவதில் மக்களிடையே அமைதியின் விதைகளாக விளங்கட்டும் என்று உரைத்துள்ளார்.

பயங்கரமான துயரங்களைத் தொடர்ந்து தாங்கிக் கொண்டிருக்கும் அன்பான மற்றும் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் மக்களுக்கு நமது நெருக்கத்தையும் செபங்களையும் உரித்தாக்குவோம் என்றும், செபத்தில் ஒன்றித்திருப்போம் என்றும் தனது இரண்டாவது டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2023, 13:39