பாஸ்கா மெழுகுதிரி பாஸ்கா மெழுகுதிரி  (VATICAN MEDIA Divisione Foto)

கிறிஸ்துவின் உயிர்ப்பின் அருளை வரவேற்போம் – திருத்தந்தை

கிறிஸ்துவின் உயிர்ப்பாற்றல் நமது வாழ்வை மாற்ற அனுமதிக்க வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் .

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுளின் இரக்கத்தால் நாம் புதுப்பிக்கப்படுவோம் என்றும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் அருளை நாம் வரவேற்க வேண்டும் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தியினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல்14 வெள்ளி உயிர்ப்புப் பெருவிழாவின் ஐந்தாவது நாளாகிய இன்று உயிர்ப்பின் மகிழ்வை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று வலியுறுத்தி குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்பாற்றல் நமது வாழ்வை மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பாற்றலை வரவேற்போம், கடவுளின் அருளால் புதுப்பிக்கப்படுவோம், உயிர்ப்பாற்றல் நம் வாழ்வை மாற்ற அனுமதிப்போம், உலகில் நீதியும் அமைதியும் மலர இரக்கத்தின் முகவர்களாக மாறுவோம் என்பதே அக்குறுஞ்செய்தி உணர்த்துவதாகும்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2023, 13:19