அன்னை மரியா பெருங்கோவில் சென்று திருப்பயண வெற்றிக்கு நன்றி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஹங்கேரி நாட்டில் மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை முடித்து ஏப்ரல் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உரோம் நகர் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் உரோம் நகரின் அன்னை மரியா பெருங்கோவில் சென்று திருப்பயண வெற்றிக்கு நன்றி கூறினார்.
எந்தவொரு திருப்பயணத்தைத் துவக்குவதற்கு முன்னரும், முடித்தபின்னரும் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, அங்குள்ள Salus Populi Romani என்ற அன்னைமரி திருஉருவம் முன்னர் செபிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் Fiumicino விமானதளத்தில் உள்ளூர் நேரம் மாலை 7.25 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10.55 மணிக்கு தரையிறங்கிய பின்னர் நேராக உரோம் மையத்தில் இருக்கும் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று சிறிது நேரம் செபித்தார்.
ஏப்ரல் 28 முதல் 30 வரை ஹங்கேரி நாட்டில் தான் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் வெற்றியடைய தனக்கு உதவிய அன்னைமரிக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னை மரி திருவுருவம் முன் சிறிது நேரம் செபித்தபின் வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் நோக்கிப் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்