77-வது பொது அமர்வில் பங்குபெறவுள்ள ஆயர்களுடன் திருத்தந்தை 77-வது பொது அமர்வில் பங்குபெறவுள்ள ஆயர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

திருஅவை மற்றும் உலகின் சவால்களை எதிர்கொள்ளுங்கள்

இறையழைத்தல்கள், குருமடங்கள் மற்றும் அருள்பணியாளர்களின் பணிகளில் எப்போதும்போல, அக்கறை செலுத்துங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவை மற்றும் உலகின் சவால்களை எதிர்கொள்ளவேண்டுமென இத்தாலிய ஆயர்பேரவையை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மே 22, இத்திங்களன்று, பிற்பகல் திருப்பீடத்தில், இத்தாலிய ஆயர் பேரவையின் 77-வது பொது அமர்வில் பங்குபெறவுள்ள 200-க்கும் மேற்பட்ட ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தைக்கும் இத்தாலிய ஆயர்களுக்கும் இடையே ஏறத்தாழ மூன்று மணிநேரம் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழ்ந்த இவ்வுரையாடலில், அமைதி, நிதி, சுற்றுச்சூழல், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களின் பணிகள் ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான பணிகள் குறித்தும் திறந்த உரையாடலை ஆயர்களுடன் நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறையழைத்தல்கள், குருமடங்கள் மற்றும் அருள்பணியாளர்களின் பணிகள் குறித்தும் ஆயர்களுடன் உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்பொழுதும் போல, இவற்றில் அக்கறை செலுத்துமாறும் ஆயர்களைக் கேட்டுக்கொண்டார். 

மே 22, திங்களன்று தொடங்கிய இத்தாலிய ஆயர் பேரவையின் பொதுஅமர்வு மே 25, வியாழக்கிழமையன்று நிறைவடைகிறது. "ஆவியானவர் தலத்திருஅவைகளுக்குச் சொல்வதைக் கேட்பது: பகுத்தறிவை நோக்கிய படிகள்" என்ற தலைப்பில் இது நடைபெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2023, 12:35