பாத்திமா அன்னையின் திருஉருவம் முன் திருத்தந்தை (கோப்புப்படம் 2022) பாத்திமா அன்னையின் திருஉருவம் முன் திருத்தந்தை (கோப்புப்படம் 2022) 

அமைதியை நோக்கியப் பாதையைக் காட்டும் அன்னை

இயேசுவின் தாயும் நம் அனைவரின் சொந்த தாயுமான பாத்திமா அன்னை, அமைதியை நோக்கிச் செல்லும் சந்திப்பு மற்றும் உரையாடலுக்கானப் பாதைகளை உருவாக்க நமக்கு உதவுவாராக

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவின் தாயும் நம் ஒவ்வொருவரின் தாயுமான அன்னை மரியா சந்திப்பு மற்றும் உரையாடலுக்கான அமைதியின் பாதையை உருவாக்க நமக்கு உதவுகின்றார் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 13 சனிக்கிழமை புனித பாத்திமா அன்னை திருவிழாவன்று ஹாஸ்டாக் ஒன்றிணைந்து செபிப்போம்  என்ற தலைப்பில் இவ்வாறு தன் கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தயக்கமின்றி துணிவுடன் நடக்க அன்னையின் அருளை வேண்டியும் வலியுறுத்தியுள்ளார்.

இயேசுவின் தாயும் நம் அனைவரின் சொந்த தாயுமான பாத்திமா அன்னை, அமைதியை நோக்கி செல்லும் சந்திப்பு மற்றும் உரையாடலுக்கானப் பாதைகளை உருவாக்க நமக்கு உதவுவாராக என்றும், அவற்றைத் தயக்கமின்றி துணிவுடன் பெற்று வாழ அன்னையின் அருள் வரங்களைப் பெற ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2023, 13:38