சித்ரவதைகளை முற்றிலுமாக ஒழிக்க, அர்ப்பணத்துடன் உழைக்க
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகில் அனைத்துவகையான சித்ரவதைகளும் அகற்றப்பட வேண்டும் எனவும், குடும்பங்களுக்கான மறைப்பணியில் கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்தும், மே மாதம் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் மாத செபக்கருத்தான, சித்ரவதைகள் உலகம் முழுவதும் நிறுத்தப்படவேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து தன் குறுஞ்செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சித்ரவதைகளை முற்றிலுமாக ஒழிக்க அனைத்துலக சமுதாயம் அர்ப்பணத்துடன் உழைக்கவும், சித்ரவதைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளையும் ஆதரவையும் வழங்கவும் நாம் செபிப்போம் என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், தன் பிறிதொரு குறுஞ்செய்தியில், குடும்பங்களை சமூக மற்றும் மறைப்பணி வாழ்வின் மையமாகக் கொண்டு செயல்படுவதற்கு உதவும் அனைத்து தரப்பினரையும் பாராட்டுவதோடு, அவர்கள் நம்பிக்கையுடனும் புதுப்படைப்பாற்றல் திறனுடனும் தங்களை இதில் அர்ப்பணிக்குமாறு ஊக்குவிக்கிறேன் என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்