தகவல் தொடர்பு ஒலி ஒலிக் குறியீடுகள் தகவல் தொடர்பு ஒலி ஒலிக் குறியீடுகள் 

திருஅவையின் நினைவுகளை உள்ளடக்கிய ஒலி-ஒளிக் கோப்புகள்

கத்தோலிக்க மத பாரம்பரியத்தின் வரலாறு கொண்டிருக்கும் மதிப்பீடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவை உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையில் ஒலி-ஒளி கோப்புகள் வழியாக அதன் நினைவுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட MAC என்ற அமைப்பின் அறிவியல் குழுக் கூட்டத்திற்கு தன் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் நினைவுகளை நிலைத்திருக்க உதவும் ஒலி-ஒளிக் கோப்புகளைப் பாதுகாக்க வேண்டிது அவசியம் என்பதை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க மத பாரம்பரியத்தின் வரலாறு கொண்டிருக்கும் மதிப்பீடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

பழங்காலக் கோப்புகள், திரைப்பட தொகுப்புகள், கல்வி அமைப்புக்கள் என பலவற்றின் கூட்டுமுயற்சியின் வழியாக, கத்தோலிக்க மதத்தின் மரபுரிமை ஒலி-ஒளிக் கோப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என தன் செய்தியில் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க திருஅவையின் ஒலி-ஒளி நினைவுகள் என்ற பெயர் கொண்ட MAC அமைப்பு, தன் முதல் அறிவியல் குழுக்கூட்டத்தை ஏப்ரல் 2ஆம் தெதி, செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் அப்போஸ்தலிக்க நூலகத்தில் நடத்தியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2023, 12:46