திருத்தந்தை, ஜூன் 16, வெள்ளிக்கிழமை காலை இல்லம் திரும்புகிறார்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 16, வெள்ளிக்கிழமை காலை, உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து தனது இல்லம் திரும்புகிறார் என்றும் அவருடைய உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கைகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார் திருப்பீடத் தகவல் தொடர்பு இயக்குநர் மத்தேயோ புரூனி.
மருத்துவமனையிலுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து காலை நேரத்தை தனது பணிகளை ஆற்றுவதற்கும், வாசிப்பதற்கும் செலவிட்டு வருகின்றார் என்றும், மதிய உணவுக்கு முன் அவர் இறைவேண்டல் செய்வதாகவும், பின்னர் திருநற்கருணையை உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் புரூனி.
திருத்தந்தையின் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கைகள் அவர் தொடர்ந்து நலமுடன் இருப்பதை உறுதி செய்கின்றன என்றும், குடலிறக்க நோய்க்கான அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு அவரது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார் புரூனி.
உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஜூன் 7, புதன்கிழமையன்று, குடலிறக்க நோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்