தேடுதல்

உலக இளையோர் நாள் சிம்பாவே (கோப்புப்படம் 2022) உலக இளையோர் நாள் சிம்பாவே (கோப்புப்படம் 2022) 

உலக இளையோர் நாளுக்கான திருத்தந்தையின் பயணத்திட்டம்

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை போர்த்துக்கலில் உள்ள பாத்திமா அன்னை ஆலயம் செல்ல இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக்கிழமை காலை இளையோர்க்கான திருப்பலியைச் சிறப்பித்து அன்று இரவே வத்திக்கான் திரும்ப உள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பனில் நடைபெற இருக்கும் 37ஆவது உலக இளையோர் நாளை முன்னிட்டு திருத்தந்தையின் பயணத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்பட்டன.

ஜூன் 6 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அத்தகவல்களின்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் மாதம் 2 புதன்கிழமை முதல்  6 ஞாயிற்றுக்கிழமை வரை லிஸ்பனில் நடைபெறும் 37 ஆவது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

ஆகஸ்ட் 2 புதன்கிழமை தொடங்க உள்ள தனது லிஸ்பன் பயணத்தில் அரசுத்தலைவர்கள், அதிகாரிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், அருள்பணித்துவ மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரையும் சந்திக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை லிஸ்பனில் இயங்கும் இரக்கப்பணிகளுக்கான அமைப்பினரைச் சந்திக்க இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் இளையோரோடு இணைந்து சிலுவைப்பாதையினை தியானிக்க உள்ளார்.

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை போர்த்துக்கலில் உள்ள பாத்திமா அன்னை ஆலயம் செல்ல இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக்கிழமை காலை இளையோர்க்கான திருப்பலியைச் சிறப்பித்து அன்று இரவே வத்திக்கான் திரும்புவார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2023, 14:30