வன்முறைச் சம்பவத்தால் துயற்று அழும் பெண்கள் வன்முறைச் சம்பவத்தால் துயற்று அழும் பெண்கள்  

ஹோண்டுராஸ் வன்முறைச் சம்பவம் குறித்து திருத்தந்தை வருத்தம்!

ஹோண்டுராஸ் சிறையில் நிகழ்ந்த இவ்வன்முறைச் சம்பவத்தின்போது இரு குழுக்களாக பெண் கைதிகள் மோதிக்கொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த மோதலில் ஏறத்தாழ 41 பேர் உயிரிழந்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் வத்திக்கான்

கடந்த வாரம் ஜூன் 20, செவ்வாயன்று, ஹோண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த கலவரம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், அங்கு நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உறவுநிலைக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 25, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்பு இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வைக் கண்டு தான் மிகவும் வருந்துவதாகவும், இறந்த அனைவருக்காக இறைவேண்டல் செய்வதாகவும் கூறினார்.

வன்முறையில் பலியானோர்

ஹோண்டுராஸின் தாமராவிலுள்ள மகளிர் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்டத வன்முறையில் இரு குழுக்களாகப் பெண் கைதிகள் மோதிக்கொண்டதாகவும்,  கையில் கிடைத்தவற்றை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த மோதலில் ஏறத்தாழ 41 பேர் உயிரிழந்தனர். இதில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர். ஏழு பெண் கைதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் காயங்களுகளுடன் டெகுசிகல்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2023, 14:44