திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

ஏழைகளுக்கு உதவுவோர் குறித்து இறைவன் மகிழ்ச்சி

உதவித் தேவைப்படுவோரை நோக்கி இயேசுவின் பெயரால் விரித்த கைகளுடனும் இதயத்துடனும் அணுகிச் செல்லும்போது நன்மைத்தனம் வளர்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உதவித் தேவைப்படுபவர்களுக்கு பணியாற்றுபவர்களை இறைவன் மன மகிழ்வுடன் உற்று நோக்குகிறார்  என ஜூன் 27, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உதவித் தேவைப்படுபவகளுக்கு பணியாற்றுவோர் குறித்து இறைவன் மனம் மகிழ்கிறார், வாழ்வில் உதவித் தேவைப்படுவோரை நோக்கி இயேசுவின் பெயரால் உறுதியுடன் சிறு அடிகளை எடுத்துவைத்து விரித்த கைகளுடனும் இதயத்துடனும் அவர்களை அணுகிச் செல்லும்போது நன்மைத்தனம் வளர்கிறது என்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், ஜூலை மாதம் முழுவதும் திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் இடம்பெறாது எனவும், ஜூன் மாதம் 28ஆம் தேதி இடம்பெறும் புதன் பொது மறைபோதகத்துக்குப்பின் அடுத்த புதன் மறைபோதகம் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியே இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முழுவதும் கோடை விடுமுறைக்காலத்தில் திருத்தந்தை இருப்பதாலும், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் லிஸ்பன் உலக இளையோர் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் செல்வதாலும் இந்த இடைவெளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2023, 13:55