திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

சித்ரவதையின் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

சித்ரவதைகளை ஒழிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கும் அனைத்துலகச் சமூகம் தன்னை முழுதுமாக அர்பணித்துக்கொள்ள வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சித்ரவதையின் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்! என்று அனைத்துலக சமூகத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் 26, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தி பக்கத்தில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துலகச் சமூகம், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நபரின் மாண்பைக் கருத்தில் கொண்டு, சித்திரவதைகளை ஒழிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கும் தாமதமின்றி தன்னை அர்ப்பணிப்பது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக அளவில் சித்ரவதை

99 விழுக்காடு சித்ரவதையால் ஏற்படும் இறப்புகளுக்கு சிரியா ஆட்சியே பொறுப்பாகும், என்றும், சித்திரவதை மற்றும் இறப்பு விகிதத்தில் சிரியா இன்னும் உலகின் முன்னணி நாடாக உள்ளது என்று SNHR எனப்படும்  தரவுத்தளம் தெரிவிக்கிறது.

மேலும் பார்வைக்கு வெளியே" என்ற தலைப்பில், மார்ச் 2011 முதல் ஜூன் 2018 வரை 167 குழந்தைகள் மற்றும் 59 பெண்கள் (வயது வந்த பெண்) உட்பட 13,197 நபர்கள் சித்திரவதை காரணமாக இறந்ததாக அறிக்கை ஒன்றும் ஆவணப்படுத்துகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2023, 14:19