போலந்து திருப்பயணிகளுடன் திருத்தந்தை போலந்து திருப்பயணிகளுடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

உரோமில் தியானம் மேற்கொள்ளும் போலந்து திருப்பயணிகளுடன் திருத்தந்த

போலந்தின் இளைய தலைமுறையினரும், பல குடும்பங்களும் உரோம் தியானத்திற்காக இவ்வாண்டு முழுவதும் தங்கள் பங்குதளங்கள் வழி தங்களைத் தயாரித்து வந்துள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

போலந்து நாட்டின் மிகப்பெரும் கத்தோலிக்க இயக்கமான, ‘வாழும் திருஅவையின் பாலைநில நந்தவனம்’ என்பதால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள தியானத்தில் பங்குகொள்ள வந்திருக்கும் போலந்து நாட்டு திருப்பயணிகளை திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல குடும்பங்கள் உட்பட ஏறக்குறைய 150 திருப்பயணிகளை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, கிறிஸ்தவப் பாதையில் அவர்கள் தங்களை உருவாக்கிவருவது குறித்து அவர்களைப் பாராட்டி ஊக்கமளித்தார்.

கர்தினாலாக அண்மையில் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள போலந்தின் Łódź பேராயர் Grzegorz Ryś  அவர்களால் வழிநடத்தப்படும் இந்த தியானம், திருத்தந்தையுடனான சந்திப்பையும், உரோம் நகரின் பல்வேறு திருத்தலங்களை தரிசிப்பதையும் உள்ளடக்கியது.

போலந்தின் இளைய தலைமுறையினரும், பல குடும்பங்களும் இந்த தியானத்திற்காக இவ்வாண்டு முழுவதும் தங்கள் பங்குதளங்கள் வழி தங்களைத் தயாரித்து வந்துள்ளனர்.

இந்த தியானத்தை ஏற்பாடுச் செய்து நடத்திவரும் ‘வாழும் திருஅவையின் பாலைநில நந்தவனம்’ என்ற இந்த அமைப்பு, அருள்பணி Franciszek Blachnicki என்பவரால் நிறுவப்பட்டது. இவர் 1987ஆம் ஆண்டு கம்யூனிச பாதுகாப்புத் துறையால் கொல்லப்பட்டார்.

போலந்து மக்கள் பங்குபெறும் இந்த தியானமுறை, செப பாரம்பரியங்களின் பல்வேறு முறைகளை அறிதல், உடன்பிறந்த உணர்வுடன்கூடிய கூட்டங்களில் கலந்துகொள்ளல், கிறிஸ்தவ வரலாற்றை ஆழமாகக் கண்டுகொள்ளல், பல்வேறு திருத்தலங்களை சென்று சந்தித்தல் போன்றவைகளை உள்ளடக்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2023, 14:36