திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

பகைமைக்கு அன்பால் பதிலளிக்கும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்களாகிய நமது நம்பிக்கை நம் ஒவ்வொருவரின் எதார்த்தத்தையும் நமக்குள்ளிருந்து மாற்றுகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்தவர்களின்   தீர்க்கதரிசனம் என்னும் தொலைநோக்குப்பார்வை என்பது தீமைக்கு நன்மையால் பதிலளிப்பது மற்றும், பகைமைக்கு அன்பால் பதிலளிப்பதாகும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 1 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு தன் கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நமது வாழ்வின் எதார்த்தத்தை நமக்குள்ளிருந்து மாற்றுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தீமைக்கு நன்மையால் பதிலளிப்பது, பகைமைக்கு அன்பால் பதிலளிப்பது, பிரிவினைக்கு ஒன்றுபடுவதால் பதிலளிப்பது இவையே கிறிஸ்தவர்களின் தொலைநோக்குப் பார்வையாகும் என்றும், கிறிஸ்தவர்களாகிய நமது நம்பிக்கை நம் ஒவ்வொருவரின் எதார்த்தத்தையும் உள்ளிருந்து மாற்றுகின்றது என்றும் அக்குறுஞ்செய்தி வழியாக திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2023, 11:25