போர்த்துக்கல் பாத்திமா அன்னை போர்த்துக்கல் பாத்திமா அன்னை 

ஒளிரும் நட்சத்திரமான மரியாவின் உடனிருப்பு

போர்த்துக்கலின் மிகவும் புகழ்வாய்ந்த பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கு மேற்கொள்ளப்படும் கிறிஸ்தவ திருப்பயணத்தின் ஒளிரும் நட்சத்திரமானவர் கன்னி மரியா.

மெரினா ராஜ் - வத்திக்கான் 

உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க போர்த்துக்கல்லின் லிஸ்பனிற்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது பயணத்தையும்  நடக்க இருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செல்வதாக தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை இவ்வாறு தனது கருத்துக்களை #WYD என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கல் நாட்டிற்கு வரும் திருப்பயணிகளின் ஒளிரும் நட்சத்திரமான அன்னை மரியாவிடம் உலக இளையோர் தினத்தில் பங்கேற்கும் அனைவரையும் ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இருக்கும் எனது பயணத்தில் செபத்தில் உடன்வாரும். போர்த்துக்கலில் மிகவும் புகழ்வாய்ந்த பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கு மேற்கொள்ளப்படும் கிறிஸ்தவ திருப்பயணத்தின் ஒளிரும் நட்சத்திரமான கன்னி மரியாவிடம் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இருக்கும் திருப்பயணிகள், மற்றும் உலகத்தில் உள்ள இளையோர் அனைவரையும் நான் ஒப்படைக்கிறேன் என்பதே அக்குறுஞ்செய்தியில் திருத்தந்தை வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2023, 14:48