கருணை இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கருணை இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

Casa della Misericordia கருணை இல்லம்

உலான்பாதரின் அப்போஸ்தலிக் நிர்வாகி கர்தினால் ஜோர்ஜோ மரேங்கோ மற்றும் திருப்பீடத்தின் ஆஸ்திரேலிய கத்தோலிக்க மறைப்பணி அமைப்பினர் ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் உருவானது இவ்வில்லம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

Casa della Misericordia கருணை இல்லம்  

உலான்பாதர் நகரின் நடுவில், பயங்கோல் மாவட்டத்தில் உள்ள சார்ட்ரஸின் புனித பவுல்சபை அருள்சகோதரிகளுக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது இக்கருணை இல்லம். பயன்படுத்தப்படாத பள்ளி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருணை இல்லம், உள்ளூர் தலத்திருஅவைகளின் முயற்சியால் பிறந்தது. தலத்திருஅவையினர், உலான்பாதரின் அப்போஸ்தலிக் நிர்வாகி கர்தினால் ஜோர்ஜோ மரேங்கோ மற்றும் திருப்பீடத்தின் ஆஸ்திரேலிய கத்தோலிக்க மறைப்பணி அமைப்பினர் ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் உருவானது இவ்வில்லம்.

மூன்று தளங்களைக் கொண்ட இவ்வில்லக் கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏழைகளுக்கான தற்காலிக தங்குமிடமும், வீடற்ற மக்கள் மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளுக்காக ஒரு சிறு மருத்துவ மையமும் உள்ளது. மேலும் புலம்பெயர்ந்தோருக்கான தற்காலிக தங்குமிடமாகவும் இவ்வில்லம் செயல்பட உள்ளது. இவ்வில்லத்தில் பணியாளர்கள் அனைவரும் நலவாழ்வுப்பணியாளர்கள், காவல்துறையினர், சமூகப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட உள்ளனர்.   

உலான்பாதர் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு இறைஇரக்க இல்லத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வில்லத்தின் இயக்குனர் அவர்களால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து sanità குழுவின் பிரதிதி அவர்கள் திருத்தந்தையின் முன் தனது சாட்சிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் அதன்பின் கத்தோலிக்க செயல்பாடுகள் அமைப்பினைச் சார்ந்த சிறுமியரின் நடனம் நடைபெற்றது. நடனத்தைத் தொடர்ந்து இல்லத்தின் செயல்பாடுகளை ஆற்றும் ஒருவர் தனது பணி அனுபவங்களைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2023, 10:52