தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பெனின் பகுதி தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பெனின் பகுதி   (AFP or licensors)

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்

பெனின் மற்றும் நைஜீரியாவின் எல்லையில் உள்ள Sèmè-Kraké என்ற நகரத்தில் எரிபொருள் கிடங்கு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தினால் இரண்டு சிறார் உட்பட 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆப்ரிக்காவின் நைஜீரியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தி, நாட்டை அன்னை மரியாவிற்கு அர்ப்பணித்து இரங்கல் தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட திருத்தந்தையின் இரங்கல் தந்தியானது மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் மாநிலத் தலைநகரான போர்த்தோ நோவோ மறைமாவட்டப் பேராயர் ARISTIDE GONSALLO அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி அடைய செபிப்பதாகவும் அத்தந்திச்செய்தியில்  குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெனின் மற்றும் நைஜீரியாவின் எல்லையில் உள்ள Sèmè-Kraké என்ற நகரத்தில் எரிபொருட்களின் கிடங்கு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு சிறார் உட்பட 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,  உள்ளூர் கத்தோலிக்க ஆலயக்கட்டிடத்திற்கு வெகு தொலைவில் அமைந்துள்ள டிப்போ, மற்றும் அருகில் இருந்த பல வாகனங்கள் தீயினால் சேதமடைந்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2023, 15:21