ஆர்த்தடாக்ஸ் சிரோ மலங்கரா சபையின் தலைவர், திருத்தந்தை சந்திப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 11 திங்கள் கிழமை ஆர்த்தடாக்ஸ் சீரோ மலங்கரா கத்தோலிக்க சபையின் தலைவர் மூன்றாம் பசேலியோஸ் மர்த்தோமா மத்தியூஸ் அவர்கள் முதன் முறையாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்திக்க உள்ளார்.
2021 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக திருத்தந்தையை சந்திக்க இருக்கும் மூன்றாம் Baselios Marthoma Mathews அவர்கள், திருத்தந்தை உடனான தனிப்பட்ட சந்திப்புக்குப் பின் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீடத்துறை, திருவழிபாடு மற்றும் அருளடையாளத்திற்கான திருப்பீடத்துறை ஆகியவற்றிற்கு வருகை தந்து அப்பேராயத்தின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
மேலும் செப்டம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உரோமில் உள்ள புனித பவுல் பெருங்கோவில் பகுதியில் வசிக்கும் ஆர்த்தடாக்ஸ் சிரோ மலங்கரா சபை மக்களையும் சந்தித்து கலந்துரையாடி அவர்களுடன் இணைந்து நற்கருணை வழிபாட்டிலும் பங்கேற்க உள்ளார்.
முதுபெரும்தந்தை மூன்றாம் Baselios Marthoma Mathews அவர்களுக்கு முன்பு ஆர்த்தடகாக்ஸ் சீரோ மலங்கரா கத்தோலிக்க சபையின் தலைவராகப் பணியாற்றிய இரண்டாம் Baselios Marthoma Paulose அவர்கள் உரோமிற்கு வருகைதந்தை 10 ஆவது ஆண்டு மற்றும் இந்தியாவைச் சார்ந்த ஆர்த்தடாக்ஸ் சிரோ மலங்கரா சபை கத்தோலிக்கர்கள் உரோமிற்கு முதன் முதலாக வந்ததன் 40வது ஆண்டை யும் இவ்வாண்டு நினைவுகூர்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்