திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

மரணத்தின் பாதையைத் தரும் போர்

போரினால் காயப்பட்ட சிறார், பெண்கள் மற்றும் ஆண்களின் அழுகை, தந்தையின் இதயத்தை நோக்கிய ஒரு கடுமையான செபம் போல கடவுளிடம் எழுகிறது

மெரினா ராஜ் - வத்திக்கான்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் விண்ணகத்தந்தையின் இதயத்தை நோக்கிய செபம் போன்று உள்ளது என்றும், அல்சைமர் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிப்போம் என்றும் இரண்டு குறுஞ்செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 21 வியாழன் பன்னாட்டு அல்சைமர் நாளை முன்னிட்டு ஹஸ்டாக் அமைதி மற்றும் ஹஸ்டாக் ஒன்றிணைந்து செபிப்போம் என்ற தலைப்பில் இரண்டு குறுஞ்செய்திகளை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரினால் காயப்பட்ட சிறார், பெண்கள் மற்றும் ஆண்களின் அழுகை, தந்தையின் இதயத்தை நோக்கிய ஒரு கடுமையான செபம்  போல கடவுளிடம் எழுகிறது என்றும்,  மரணத்தின் பாதை மட்டுமே தரும் போரானது சிலரை வெற்றியாளர்களாக ஏமாற்றுகிறது என்றும் தன் முதல் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாவது குருஞ்செய்தியில் பன்னாட்டு அல்சைமர் நாளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும், அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2023, 12:20